சென்னை பெருங்களத்தூரில் உள்ள புகழ்பெற்ற சாரதா சக்தி பீடத்தின் சார்பில், சதுரகிரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வத்திராயிருப்பில் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது.

சதுரகிரி மலையில் உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில், சந்தன மகாலிங்க சுவாமி கோயில், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். மலையில் இருந்த பல்வேறு அன்னதான மடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டு விட்டதால், கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை மட்டுமே அனைத்து பக்தர்களும் நம்பியிருக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் பக்தர்களின் பசிப்பிணியை போக்குவதற்காக சென்னை பெருங்களத்தூரில் உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சாரதா சக்தி பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொடக்க விழா மலை அடிவாரமான தாணிப்பாறையில் கடந்த மாதம் நடந்தது. இதனை ஒவ்வொரு மாதமும் மலைப் பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் அனைத்து நாட்களிலும் வழங்க முடிவு செய்து அதற்காக கிளை அலுவலகம் வத்திராயிருப்பில் திறக்கப்பட்டது.

இதற்கான திறப்பு விழா ஆசிரியர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. நாகமலை புதுக்கோட்டை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலச்சந்திரன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். நிலக்கிழார் எம். எஸ். எஸ். மணி, ஆசிரியர் சுப்பிரமணியன், சித்திரை இழப்பு வர்த்தகர்கள் சங்க பொருளாளர் கருப்பையா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

சாரதா சக்தி பீடத்தின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் வரவேற்பு உரையாற்றினார். அன்னை சாரதா தேவி ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் ஆகியோர் படங்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்பு அலுவலர் தனலட்சுமி, சதுரகிரி பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed