விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேர்ந்த பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 227 ஆதரவற்றகுழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொடர்ந்து 9 வருடங்களாக தீபாவளிக்குபுத்தாடை வழங்கி வந்தார்.

அதேபோல், அக்குழந்தைகளை ராஜபாளையம் பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்து தற்போதும் 10வது முறையாக தங்கப்பாண்டியன் சொந்த செலவில் ரூ.5,18,000- மதிப்பீட்டில் குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தாடையை குழந்தைகளே பார்த்து பார்த்து மகிழ்ச்சியுடன் தேர்வு செய்து எடுத்தனர்.

இந்நிகழ்வில் குழந்தைகளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர்,
தங்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது, எனவே அனைவரும் நன்றாக கல்விபயின்று அவரவர் விரும்பும் துறையில் சாதித்து ஏழைஎளிய மக்களுக்கு சேவை செய்யுமாறு குழந்தைகளை கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள் அனைவரும் கவனமாக காப்பகத்திற்கு செல்லுமாறும், தீபாவளி அன்று பட்டாசுகளை கவனமாக வெடித்து கொண்டாடுமாறும் அறிவுரை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு குழந்தைகள் அனைவரும் நன்றி கூறி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் நகர மாணவரணி அமைப்பாளர் நாகேஸ்வரன் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் தேவதர்ஷினி எதிரொலி . இன் / 8939476777
