oppo_2

கடல் கொந்தளிப்பு காரணமாக கோரை குப்பம் கிராமத்தில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் அர்ணா புயல் உருவாகி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் ஆண்டுதோறும் கருங்காலி முகத்துவாரத்தில் சாலை அடைபட்டு சாலையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது மீண்டும் மணல் தூர்ந்துள்ளதால் சாலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில் தற்காலிக சிமெண்ட் சாலை போடப்பட்டது. இருப்பினும் இந்த சாலைக்கும் மேலே கடல் சீற்றத்தின் காரணமாக மணல் அடித்து வரப்பட்டு சாலை அடைந்து விட்டது.

இந்த மணலில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அருகில் உள்ள கோரை குப்பம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கிராமத்திற்குள் கடல் நீர் உள்புகுந்தது இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed