6 கோடி மதிப்பில் கட்டப்படும் யூனியன் அலுவலக கட்டுமான பணி தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் எதிரொலி;

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.5.90 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணி தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்தது. மேலும் இப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான முறையில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து சோழவந்தான் தவெக எம் எல் ஏ கருப்பையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது யூனியன் அலுவலக கட்டுமான பணி நடந்துவரும் சுவற்றில் கைகளால் சுரண்டி பார்த்தும் தரைமட்ட கட்டுமானப் பணியை கால்களால் எட்டியும் மேலும் தனது கட்சி நிர்வாகியை அழைத்த எம் எல் ஏ கடப்பாரையை கொண்டு கட்டிடத்தை உடைத்துப் பார்க்க சொல்லியும் ஆய்வு செய்தது அங்கிருந்து அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

23 ஊராட்சிகளுக்கு நிர்வாக வசதிகளுக்காக சுமார் 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வாடிப்பட்டி யூனியன் அலுவலக கட்டுமான பணி தரமற்ற முறையில் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவான ஆய்வு மேற்கொண்டு கட்டிடத்தின் உறுதி தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்
இதில் மழைநீர் சேமிப்பு தொட்டி
கட்டுமானம் ,அலுவலக அறைகள், கூட்ட அறை, பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ கருப்பையா அங்கிருந்தே அதிகாரிகளிடம் போனில் பேசி கட்டடத்தின் உறுதி தன்மையை கேட்டறிந்தார்.

மேலும், பணியினை தரமான முறையிலும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்கவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கட்டடத்தின் உறுதி தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed