தமிழ்நாடு அரசின் இலவச பஸ் பயணத்தால் ஆட்டோ தொழில் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து ஆட்டோக்களுக்கும் தினமும் 5 லிட்டர் எரிபொருள் மானிய விலையில் வழங்கவும் பைக் டாக்ஸியை முற்றிலும் தடை செய்யவும் ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரியும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் ஜவஹர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட தலைவர் எம். மகாலட்சுமி தலைமையில் சாலை போக்குவரத்து சங்க மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி விளக்க உரையாற்றினார்.

மேலும் மாவட்ட உதவி செயலாளர் ஜி கணேசன், சிஐடியு டாக்ஸி தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், டாக்ஸி தொழிலாளர் சங்க தலைவர் விஜயகுமார், ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலைவர் முருகன் உள்பட ஏராளமான கலந்துகொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
