சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அரசு பணி வழங்கிடக் கோரியும் , தமிழ்நாட்டில் விண்ணைத் தொட்டு ஏறிவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கக் கோரியும் , இளவயது விதவைப்பெண்மணி ஒருவர் , தனது 9 வயது மகனுடன் பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் படுத்து உருண்டு தர்ணாவில் ஈடுபட்டார்.
சிவகங்கை நகர் விஷ்வநாதர் சாலையை சேர்ந்தவர் கார்த்தி, பானுமதி தம்பதியர். இவர்களில் பானுமதி பெற்றோரின்றி ஆசிரமத்தில் வளர்ந்தவராவார்,
இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 9 வயதில் சூர்யா என்கிற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன் கார்த்தி உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே ஆதரவின்றி தவித்துவரும் பானுப்பிரியா தனக்கு கருனை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரி சிவகங்கை எம்.எல்.ஏ குழந்தைராணி நாச்சியார் , மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் எவ்வித பிரயோஜனமும் இல்லாத இந்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் தனது மகனுடன் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் , அன்றாட அத்தியாவசிய தேவைகளான சாப்பாடுக்கு கூட மிகவும் சிரமப்படுவதாகவும் கூறி தமிழ்நாடு அரசு விலைவாசி உயர்வினைகா கட்டுப்படுத்தவும் கோரிக்கை வைத்து , இன்று சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு தனது மகனுடன் வந்த பானுமதி விலைவாசி உயர்வால் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாகவும் , எவ்வித இலவசங்கள் எதுவும் தனக்கு வேண்டாம் எனவும் , அரசு வேலை வழங்கிடக் கோரியும் , மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள பேருந்து நிலைய வாயிலில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் சாலையில் படுத்து உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்களும், காவல்துறையினரும் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்.
செய்திகள் : ஆனந்த் எதிரொலி
