பொதுமக்கள் வெகுவாக பாராட்டு…
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியை அடுத்துள்ள கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டத்தேவன் கார்த்திக், த.வெ.க கட்சி பிரமுகரான இவர்
சுற்றுசூழலை பாதுகாத்திடும் வண்ணம் , தனது வே பிரிட்ஜ் நிறுவனத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கான முன்னெடுப்பாக எவ்வளவு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரும் நபர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை அறிவிப்பு செய்திருந்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், கருவேல மரங்களை வெட்டும் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் சிறப்புப் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது…
சுமார் 30 நாட்களில் அதிக அளவில் கருவேல மரங்களை வெட்டி எடுத்து வரும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் கொண்டு வந்த மரங்களின் எடைக்கு ஏற்ப பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் 100 டன் கருவேல மரங்களைக் கொண்டு வந்த நபருக்குத் தங்கக் காசும் , 80 டன் கருவேல மரங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு டிவி மற்றும் ஏர்கூலரும் .
60 டன் கருவேல மரங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு மொபைல் போன் மற்றும் மிக்ஸியும் வழங்கப்பட்டது…
சிவகங்கை மாவட்டத்தில்
கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உழைப்பைப் பாராட்டிவும் , அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டது… இத்தகைய முயற்சிகள் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மேலும் பலர் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்பினை நடத்திய கல்லல் தமிழக வெற்றிக் கழக பிரமுகரான , வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரான கட்டத்தேவன் கார்த்திக்கின் செயல்பாடுகளை பொதுமக்கள் பலரும் வெகுவாகப் பாராட்டினர்…

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
