தமிழக முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை நிறுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஊர்வலமாக வந்த விவசாயிகள் தேர்தல் வாக்குறுதிகளின்படி விவசாயிகள் பெற்ற பயிர்கடன் முழுவதையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் நான்கு ரோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி தேன்கனிக்கோட்டையிலும் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
