வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீர செட்டி பள்ளி அருகே சுமார் 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பு நிலத்துக்குள் வந்து கொண்டிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் குடியாத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனசரக அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் வனவர்கள் சதீஷ், குமரேசன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிலத்துக்குள் புகுந்து வந்த மலைப்பாம்பை பிடித்து பத்திரமாக மீட்டு கள்ளப்பாடி காப்பு காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் நன்றியும் வாழ்த்தும் கூறினார்கள்.
செய்திகள் : மூர்த்தி / எதிரொலி . இன் / 8939476777
