மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது தினசரி ஒவ்வொரு வேடத்தில் ஜெனகை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நவராத்திரி விழாவின் 9வது நாளான சரஸ்வதி பூஜையான நேற்று மணிகண்டன் சரஸ்வதி வேடத்தில் ஜெனகை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மணிகண்டன் சரஸ்வதி வேடத்தில் காட்சி அளித்த ஜெனகை மாரியம்மன் க்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஜெனகை மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா உள்ளிட்டோ செய்திருந்தனர் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளையும் பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
