நீலகிரி மாவட்டம், உபதலை பேரூராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம் கிராமத்தில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ், உதவி வனப்பாது காவலர் கிருபாகாரன், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முதல்வர் மரு. சீனிவாசன், மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் கவிதா, பர்வீனா, மற்றும் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமினை குறித்தும் அதன் அவசியத்தை குறித்தும் மாநில தலைவர் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பழத்தோட்டம் கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் மக்கள் அதிகாலையில் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமில் பயன் பெற்றனர்.
இந்த மருத்துவ முகாமின் ஏற்பாடுகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் தோழர் சகாயராஜா மற்றும் நிர்வாகிகள், ஊர் தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முகம் நிகழ்ச்சினை தொடர்ந்து இப்பகுதியில், மரம் நடும் விழாவும் நடைபெற்றது.


விழாவிற்கு தலைமை ஏற்க வந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மேலாளர் வனத்துறை அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம். ராஜு அவர்கள், மருத்துவ முகாம் சீராக நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்தும் மக்களுக்கு மருத்துவ முகாமையும் அதனுடைய பயன்களையும் பற்றி சிறப்புரை ஆற்றி பிறகு மரக்கன்றுகளையும் நட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், தேசிய குழு உறுப்பினர் கோவை மோகன்ராஜ் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் சேலம் ஜி. காதர் ஷெரீப், கோவை எஸ்.ராஜா ராமன், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஊர் மக்கள் சார்பாக கோவை பி.எஸ். ஜி. மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகள் : பி.ஆர்.ஓ பார்த்திபன் / எதிரொலி . இன் / 8939476777
