ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய 100 நாள் வேலை திட்டத்தில் இருந்த காந்தியின் பெயரை நீக்கியது மற்றும் அந்த திட்டத்தில் மேலும் பல குளறுபடி செய்திருப்பது, ஆயுள் காப்பீடு திட்டங்களில் அந்நிய முதலீடுகளை நுழைப்பது, மற்றும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை முழுமையாக தராதது, உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை கண்டித்தும், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதே பிரச்சனையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் காலையில் அரசியல் போராட்டமும் மாலையில் ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, காலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில், மறியல் போராட்டம் நடைபெற்றது, அதில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.

அதில், விநாயகமூர்த்தி, கதிர்வேலு, ரமேஷ் குமார், ஜெயவேலு, சதீஷ் குமார், சலீல்குமார், ஏ ஐ டி யு சி சார்பில் நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், ஜானகிராமன், ஆனந்தன், பார்த்திபன், செந்தில் குமார், மன்மதன் மற்றும் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர். மறியலில் ஈடுபட்டனர்.


மறியலில் ஈடுபட்டவர்களை மீஞ்சூர் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்து பின்னர் விவரங்களை சேகரித்த பின்னர், வரிகளில் ஈடுபட்ட அனைவரையும் மாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.

செய்தியாளர் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
