காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள அறம்பெரும் செல்வி தெருவில் ‘என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று இரவு சுமார் 8.00 மணியளவில், வழக்கம்போல் நோயாளிகளும், பொதுமக்களும் வந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இரண்டாவது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு வருவதற்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட பெண் நோயாளி, சீருடை அணிந்த பெண் காவலர் உட்பட மொத்தம் ஆறு பேர் லிஃப்ட்டில் ஏறியுள்ளனர்.

லிஃப்ட் இரண்டாவது மாடியில் இருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக முதல் மாடிக்கும் தரைத்தளத்திற்கும் இடையில் உள்ள நடுவழியில் திடீரென நின்று விட்டது.
லிஃப்ட்டில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மின்தடை காரணமாக, உள்ளே இருந்த ஆறு பேரும் வெளியே வர வழியின்றி செய்வதறியாமல் திகைத்துப் போயினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததாலும், சிறிய இடத்திற்குள் சிக்கிக் கொண்டதாலும் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், அச்சத்திற்கும் ஆளாகினர். லிஃப்பிடில் காஞ்சனா (வயது 62) ஜெயமாலினி (வயது 40) குப்பு (வயது 62) ஸ்டாலின் (வயது 40) சுமதி (வயது 48) திலகா (வயது 40) இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மிகவும் புத்திசாலித்தனமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு லிஃப்ட்டின் கதவை உடைத்து, உள்ளே சிக்கித் தவித்த ஆறு பேரையும் எவ்வித சிறு காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.

திடீர் மின்வெட்டு காரணமாக மருத்துவமனை லிஃப்ட்டில் 2 மணி நேரம் “டிக் டிக்” மனநிலையுடன் மரண பயத்தில் போராடிய 6 பேரும், தீயணைப்புத் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் உயிர் பிழைத்தது அப்பகுதியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : லட்சுமி காந்தன்/ எதிரொலி . இன் / 8939476777
