திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் 42 வது பொதுக்குழு கூட்டம் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள்,திருவள்ளூர் மாவட்ட அனைத்து மஸ்ஜித்களின் நிர்வாகிகள்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,திருவள்ளூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் உலமா பெருமக்கள் பொன்னேரி வட்டார ஜமாத் உலமா சபையின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதநேயருமான ஜெ.எம். ஹாரூன் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான நவாஸ்கனி மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு இஸ்லாமிய சமூக மக்களுக்காக வழங்கி வரும் பல்வேறு திட்டங்களை குறித்து விளக்கி கூறினர். இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் எனவும்
அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் ஒற்றுமையாக நின்று அனைத்து மத நல்லிணக்கங்களையும் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறித்தினார்.

தமிழ்நாடு வக்பு வாரிய நிலங்கள் மீட்பதற்கும் தமிழ்நாடு வக்பு வாரிய நிலங்கள் உள்ள இடங்களில் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், அமைப்பதற்கும் கல்வி வளர்ச்சிக்கு பள்ளிக்கூடங்கள் அமைப்பதற்கும் நிதி வழங்கப்படுவதாகவும் இதற்காக ஓர் ஆண்டு நிதியாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இஸ்லாமிய சமூக மக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் நாகூர் மீரான்,பொதுச் செயலாளர் இ.எம்.முகமது அலி,பொருளாளர் சுலைமான், ஒருங்கிணைப்பாளர் எ.முகமது அலி,இமாம் முஹம்மது ஜாபித்,சென்னை பாலவாக்கம் தலைமை இமாம் அபூபக்கர்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏ.எஸ்.கே.ஷா,அப்துல் பாஜில்,அப்துல் காதர்,சங்க துணை தலைவர் சேக் அஹமத், துணை ஒருங்கிணைப்பாளர் ஹாஸ் மிஸ்பாஹ் மற்றும் நிர்வாகிகள் சதகத்துல்லா,அலிகான்,மஸ்தான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் பழவை முத்து எதிரொலி . இன் / 8939486777

w

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed