கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி மலைகுன்று அமைந்துள்ள சுமார் 213 ஆண்டுகள் பழமை வாய்ந்த
ஸ்ரீ ராமசாமி பெருமாள் சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத திருவிழாவை தாய் கிராமமான தானம்பட்டி உள்ளிட்ட 15 கிராம மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா ஸ்ரீராமசாமி பெருமாள் சுவாமி திருக்கோவில் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான உற்சவ மூர்த்திகளில் திருவீதி உலாவும் மேளதாளங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவின் போது கருடவாகனம் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய இரு புஸ்ப பல்லாக்கில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் மற்றும் சீதாராமர் ஆகிய உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா கரகாட்டத்துடன், மயிலாட்டம், குதிரையாட்டம், பொய்க்கால் ஆட்டம், சேவையாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவினைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த ஸ்ரீராமசாமி பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து உடல் ஆரோக்கியம் மற்றும் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழித்திட வேண்டி தங்களது வேண்டுதலையும் நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தானம்பட்டி ஊர் கவுண்டர் கேப்டன் ராமசாமி தலைமையில் 15 கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், வரி கவுண்டர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்திகள் மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
