கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப நிர்வாகிகளுக்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து முறையாக அகற்றுவது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வை மாநகர நல அதிகாரி டாக்டர் சரோஜா தலைமை தாங்கி, மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்து சேகரிப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திருமண மண்டப நிர்வாகிகளின் பங்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருமண மண்டபங்களில் உருவாகும் கழிவுகளை முறையாகப் பிரித்து அகற்றுவதன் மூலம் தூய்மையான சுற்றுச்சூழலைப் பராமரிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திருமண மண்டப
தலைவர் பாரத் சிங், செயலாளர் சிதம்பரதாண பொருளாளர் வெங்கட சுப்பிரமணியன், துணைத்தலைவர் கணேசன், டேனியல் , துணைச் செயலாளர் யூசுப் , கெங்காதரன் , செயற்குழு உறுப்பினர் ஞானஆனந்த், அனித்குமார் , நடராஜன், தமிழரசு, பியூலா அஜ்ந்த், அதிப் பத்பநாபன், விஜயன் ,சாதிக், மற்றும் உட்பட நிர்வாகிகளும் மற்றும் 75 திருமண மண்டப உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed