தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் துவக்க விழாவிற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்வரை காண ரசிகர்களும் பொதுமக்களும் முண்டியடித்த வேளையில் கூட்டத்திற்கு சிக்கிக்கொண்ட தம்பதியரின் குழந்தையை தன்னோடு பாதுகாப்பாக வைத்து பாதுகாத்த காவலரின் மனிதாபிமானம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் துவக்க விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இது பங்கேற்பதற்காக விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம் ரிங் ரோடு வழியாக வருகை தந்த முதல்வர், அண்ணா நகர் அண்ணா பேருந்து நிலையம் வழியாக பனகல் சாலையில் அமைந்திருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

அச்சமயம் சாலையின் இருபுறமும் முதல்வர் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். பொதுமக்களில் வரவேற்பபைபெற்ற தமிழக முதல்வர் விஜய் அரசு ராஜாஜி மருத்துவமனையின் உள்ளே அமைந்துள்ள அதன் கூட்ட அரங்கிற்குச் சென்றார். இந்நிலையில் திரும்பி வரும் பொழுது முதல்வரை பார்க்கும் ஆர்வத்தில் கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வந்த கூட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனை பிரதான நுழைவுப் பகுதியில் திரண்டு ஓடி வந்தனர். அந்த கூட்டத்திற்குள் முதல்வர் விஜய்யை காண இளம் தம்பதியர் தங்களது குழந்தையோடு ஓடி வந்தனர். கடும் வெயில் காரணமாக அந்த குழந்தை மிகவும் சோர்வுற்றிருந்தது.

இதனைக் கண்ட காவலர் ஒருவர் உடனடியாக அருகில் இருந்த ஒருவரிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி குழந்தைக்கு கொடுத்ததோடு அந்த கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டிருந்த தம்பதியரிடமிருந்து குழந்தையை பெற்று தானே முதல்வர் திரும்பி செல்லும் வரை வைத்துக் கொண்டிருந்தார். ஹரி என்ற அந்தக் காவலரின் இந்த மனிதாபிமானம் மிக்க செயல் அந்தப் பகுதியில் இருந்த அனைவரின் பாராட்டைப் பெற்றது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed