மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இன்று தனது டூவிலரில் அலங்காநல்லூர் – மேலூர் புதிய நான்கு வழிச்சாலை பிரிவில் சென்ற போது திடீரென்று எதிர்பாராத விதமாக மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து மாணவரை வழிமறித்து சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
இதில் கல்லூரி மாணவர் சஞ்சய் குமார் தலை மற்றும் உடம்பில் வெட்டுக்காயுடன் பலத்த காயமடைந்தார். உயிருக்கு பயந்து அங்கிருந்து மாணவர்கள் தப்பி ஓடிய போது அங்கிருந்து கிராம பொதுமக்கள் அவர்களை மீட்டவுடன் கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இச்சம்பவத்தின் தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சஞ்சய்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அலங்காநல்லூர் அருகே கல்லூரி மாணவரை மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியதில் ரத்த வெள்ளத்தில் தஞ்சம் அடைந்து மாணவர் உயிருக்கு போராடிய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
