ஸ்ரீவில்லிபுத்தூர் நேற்று மூன்று மணியிலிருந்து 5 மணி வரை சுமார் ரெண்டு மணி நேரம் பரவலான மழை பெய்தது…
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக மாலை வேலைகளில் அவ்வப்போது பரவலான மழை பெய்து வருகிறது அந்த வகையில் நேற்று மதியம் மூன்று மணி அளவில் திடீரென பரவலான மழை பெய்ய துவங்கியது மாலை 5 மணி வரை நீடித்த இந்த மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
நகரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தது தேங்கி இருந்த தண்ணீரில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
தொடர்ச்சியாக மழை பெய்தால் வரண்டு போய் இருக்கும் கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து இருக்கும் என மக்கள் மகிழ்ச்சி கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கனமழை பெய்ததை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில், நகரில் பல பகுதிகளில் ஆணையாளர் குமார் சுகாதார ஆய்வாளர் கந்தசாமி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் விரைந்து சென்று டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
