மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கோடாங்கி தோப்பு தெருவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 1946 முதல் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். வருவாய்த்துறை சர்வே எண் 187 ல் கட்டுப்பட்ட கோடாங்கி தோப்பு தெரு பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.


ஆனால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால் பட்டா வழங்காமல் உள்ளனர். கோடாங்கி தோப்பு தெரு பொதுமக்கள் 1946 முதல் 5 ரூபாய் வாடகை இல் இருந்து தற்போது 5000 ரூபாய் வரை வாடகை செலுத்தி வருகின்றனர். நீண்ட காலமாக தங்கள் குடியிருந்து வருவதால் தங்களுக்கு பட்டா வழங்க கோரி வருவாய் துறையினரிடம் பல்வேறு மனு தாக்கல் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.


திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
