மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தேவேந்திர குல வேளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையினை நடத்தினர். கணபதி பூஜை உடன் தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை மங்கள இசை கணபதி பூஜை உடன் தொடங்கி யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. தொடர்ந்து கடம் புறப்பாடாகி மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.

தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஸ்ரீ ராஜகணபதிக்கும் ஸ்ரீ காளியம்மன் உனக்கும் பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருவேடகம் தேவேந்திரகுல வேளாளர் தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் திருவேடகம் தச்சம்பத்து மேலக்கால் தேனூர் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed