கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் திருமால், மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாவட்ட இணை செயலாளர் முனிராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் அருள் கணேசன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த பெருந்திரள் முறையீட்டில்,….
ஏஏஓ, ஏஎச்ஓ பணியினை தொழில்நுட்ப பணியாக அங்கீகரித்து, அதற்குரிய, 9,300.00 மற்றும் 4,200.00 ரூபாய்க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
யூஏடிடி 2.0வை முழுமையாக செயல்படுத்தி, தலைமை இடங்களில் விவசாயிகளுக்கு சேவை புரிய ஒருங்கிணைந்த கிராம வேளாண்மை விரிவாக்க சேவை மையம் ஏற்படுத்த வேண்டும். டிசிஎஸ் பணியில் நீதிமன்ற ஆணை மற்றும் அரசாணை எண் 15ஐ முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

டிசிஎஸ் பணியில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
துறையின் அனைத்து பணிகளும் இணைய பதிவேற்ற மூலம் நடைபெறுவதால் இணைய வசதியுடன் கூடிய கையடக்க கணினி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதோடு இந்த கோரிக்கை அடங்கிய மனுவினையும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரிடம் வழங்கினார்கள், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தணிக்கையாளர் வல்லரசு நன்றி கூறினார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
