சேலம் மாவட்டம், மூடுதுறை, நாய்க்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ செல்வ கணபதி திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா தொடர்பான சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி காலை தீர்த்தகுடம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மாலை அனுக்ஞை, விநாயகர் பூஜை, யஜமான சங்கல்பம், புண்யாக வாசனம், பஞ்சகாவ்யம், வாஸ்து சாந்தி மற்றும் அங்குரார்பணம் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து இரவு ஓம் ஸ்ரீ மஹாகணபதி, ஓம் ஸ்ரீ தட்சணாமூர்த்தி மற்றும் மூஷிச வாகனத்துக்கு எந்திரஸ்தாபனம், சுவாமிகள் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. இதையடுத்து முதல் கால ஹோமம், நாடீ சந்தானம் மற்றும் முதல் கால யாக ஹோமம் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை
9442979467
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed