சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பகுதி கழக அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில், அழகாபுரம் பகுதி செயலாளர் குணா, துணைச் செயலாளர் காயத்ரி சுரேஷ், இணைச் செயலாளர் பூபதி, பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். புதிய அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.

சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை
9442979467
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *