கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசா காலனியில் 13 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில்
நடத்தி வருகிறார், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிவன் ரூபத்தில் எழுந்தருளிய விநாயகர் கால பூஜையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ராஜா கணபதிக்கு அவல், பொரி, கற்கண்டு, மோதகம், கொழுக்கட்டை, லட்டு உள்ளிட்ட பழவகைகள் கொண்டு படையலிட்டு சிறப்பு பூஜைகளும், அலங்காரப் பூஜைகளுடன் கற்பூர தீபாதரனைகளும் வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.

இந்த ராஜா கணபதி பிரதிஷ்டை பூஜையில் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி ஏராளமானவர்கள் கலந்துக்
கொண்டு ராஜா கணபதியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
பின்னர் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், புளியோதரை, சக்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் படையலிட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேலுமணி பிரதர்ஸ் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
தொடர்ந்து 5 நாட்களுக்கு காலை, மாலை என இருவேளையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை மேளத்தாளங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்து செல்லபட்டு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நிதர்ஜனம் செய்யப்பட உள்ளதாக வேல்மணி தெரிவித்தார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
