கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட கூளியம் ஏரியை நம்பி ஒம்பலகட்டு, அம்மனேரி, சவுளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பயன் பெறும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

சுமார் 50 ஏக்கர் பரப்பாளவுக் கொண்ட இந்த ஏரியை கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு தண்ணீரும் மாசு பட்டுள்ளதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மதப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் ஏரியில் உள்ள தண்ணீரை பாதுகாக்கும் விதமாகவும், நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் விதமாகவும் ஒம்பலகட்டு, அம்மனேரி, சவுளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி சமுதாய அக்கரையுடன் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாயத் தாமரையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ஒம்பலகட்டு , அம்மனேரி, சவுளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த ஏரியை நம்பி தான் உள்ளனர். இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மூலம் இந்த ஏரி நிரம்பும். இதன் மூலமாக குடிதண்ணீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் இந்த ஏரியை பயன்படுத்தி ஆண்டுக்கு மூன்று போக விளைச்சலை பெற்று வந்தோம்.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, மேலும் மாவட்டத்தில் மழை இல்லதால் ஏரியில் உள்ள ஆகாயத் தாமரை உறுஞ்சி வருவதால் ஏரியில் உள்ள தண்ணீரை பாதுகாக்க ஒம்பலகட்டு , அம்மனேரி, சளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏரியில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்பணிகள் இன்னும் 20 நாட்களுக்குள் முடிந்துவிடும் என்று தெரிவித்தனர்.

ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற கிராம மக்கள் ஒன்றுகூடி சமுதாய நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் ஏரியில் உள்ள தண்ணீரை பாதுகாக்கும் விதமாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அரசிடம் இருந்து ஏதும் எதிர்பார்க்காமல் சமுக அக்கரையுடன் ஒன்றிணைந்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளில் கிராம மக்கள் தீவிரம்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட கூளியம் ஏரியை நம்பி ஒம்பலகட்டு, அம்மனேரி, சவுளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பயன் பெறும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
சுமார் 50 ஏக்கர் பரப்பாளவுக் கொண்ட இந்த ஏரியை கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு தண்ணீரும் மாசு பட்டுள்ளதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மதப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் ஏரியில் உள்ள தண்ணீரை பாதுகாக்கும் விதமாகவும், நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் விதமாகவும் ஒம்பலகட்டு, அம்மனேரி, சவுளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி சமுதாய அக்கரையுடன் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாயத் தாமரையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ஒம்பலகட்டு , அம்மனேரி, சவுளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த ஏரியை நம்பி தான் உள்ளனர். இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மூலம் இந்த ஏரி நிரம்பும். இதன் மூலமாக குடிதண்ணீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் இந்த ஏரியை பயன்படுத்தி ஆண்டுக்கு மூன்று போக விளைச்சலை பெற்று வந்தோம்.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, மேலும் மாவட்டத்தில் மழை இல்லதால் ஏரியில் உள்ள ஆகாயத் தாமரை உறுஞ்சி வருவதால் ஏரியில் உள்ள தண்ணீரை பாதுகாக்க ஒம்பலகட்டு , அம்மனேரி, சளூர், மேல் அம்மனேரி, கூளியம் கொட்டாய் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏரியில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்பணிகள் இன்னும் 20 நாட்களுக்குள் முடிந்துவிடும் என்று தெரிவித்தனர்.

ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற கிராம மக்கள் ஒன்றுகூடி சமுதாய நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 893947677
