கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்: தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1859ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
காவலர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த காவல் துறை தியாகிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சிறப்பு காவல் கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், போக்குவரத்து பூங்கா, காவல்துறையின் ஆயுதத் தளவாடங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்கம், சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு, துப்பறியும் மோப்பநாய் பிரிவு, “நிமிர்” குழுவின் சாதனைகள், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை (BDDS) உள்ளிட்ட பல்வேறு காவல் துறை பிரிவுகளின் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், காவலர்களின் உடற்திறன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட “தடம் 3.0” விளையாட்டுப் போட்டிகளின் இறுதி சுற்றுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். தடகளம், கிரிக்கெட், கைப்பந்தாட்டம், வடம் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு இன்று மாலை நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தொடர்ந்து, காவல்துறையில் 35 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி சேவை நிறைவு செய்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS கௌரவிக்க உள்ளார்.

இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்8i ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காவலர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையிலும், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் காவல்துறையின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் i8 தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி 8939476777
