ராஜபாளையம் மதுரை தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, பள்ளி கல்லூரிகள் உள்ள காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் சாலை, ரயில்நிலைய சாலை, சத்திரப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் கூடிக் கொண்டே செல்கிறது. அதற்குக் காரணம், சாலை ஓரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வாகன நிறுத்தம் நடைபாதை கடைக்காரர்களின் ஆக்கிர மிப்பு அதிகளவில் உள்ளது தான்,
இதனால், டூ வீலர்களில் கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வானங்கள் காதுகளை செவிடாக்கும் அளவிற்கு தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை ஒலித்தபடி செல்வது, இரவில் கண்களை குருடாக்கும் அளவில் ஒளிரும் முகப்பு விளக்குகள் சொல்லொன்னா துயரத்தில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளும் இதில் தான் தினமும் பயணிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் துறை, டிராபிக் போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகள் மெத்தனமாக இருப்பதுடன் எதையும் கண்டு கொள்வதும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த துறைகள் ஒன்றிணைந்து பேருக்கு கடைகளில் சன் ஷேடுகள் மற்றும் விளம்பர பதாகைகளை மட்டும் அகற்றி தன் கடமைகளை முடித்துக் கொண்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட மாட்டாது என, ஆணித்தரமாக நம்பும் கடைக்காரர்கள் ரோடு வரை தங்கள் கடைகளை நீட்டித்துள் ளனர்.
நடைபாதை கடைக்காரர்கள் ரோட்டில் இருபுறமும் கடைகளை விரித்து போக்குவரத்திற்கு மேலும் இடைஞ்சல் செய்கின்றனர். இதற்கான தீர்வு கிடைக்குமா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
செய்திகள் ; ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777
