திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் நளாயினி முன்னிலையில் நடைபெற்றது .

குழந்தைகள் உரிமைகள் குறித்தும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் தீங்குகள் குறித்தும் , குழந்தைகள் பாலியல் வன்முறைக்கான போக்சோ சட்டம் குறித்தும், கூட்டத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் ராம்கி கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில், பொன்னேரி நகராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், பொன்னேரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாமுவேல், அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை தலைவர் ஆனந்தி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ – மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

