பெரியவெங்காயத்தின் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசுசட்டமன்றத்தில் தமிழக முதல் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பெரிய வெங்காயம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.

இதன்படி தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கும் பணி துவங்கியது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடைகளிலும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனைசெய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் விற்பனை செய்யப்பட்டது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தினை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
மேலும் பொது மக்களுக்கு வழங்கப்படும் பணியினை
சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் பார்வையிட்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசைப் பாராட்டி பேசும்போது ;
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது, இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளஅனைத்து தேசங்களிலும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இது மிகவும் பாராட்டுக்குரியது, தற்போது சந்தையில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிபட்டு உள்ளனர். இந்த நிலையில் சட்டமன்றத்தில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெங்காயத்தினை பொதுமக்கள் பெண்கள் அதிக அளவில் வந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்திய தமிழ் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார், மேலும் பூண்டின் விலையும் அதிகரித்த வண்ணம் இருப்பதால் ரேஷன் கடை மூலம் பூண்டும் விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் பத்மா, கூட்டுறவு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் விஜயகுமார், அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
