கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், காமன் தொட்டியில் சிராவண சனிக்கிழமை முன்னிட்டு தக்ஷனா திருப்பதி கோயில் நேற்று இரவு சுமார் ஏழு மணி அளவில் இறைவனின் பக்தி பாடல்களுடன் சூளகிரி ஸ்ரீ நித்யஷேத்ரா பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நடன ஆசிரியை ஸ்ரீனி சதீஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி நிறை நிறைவின் பொழுது ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் தலைவர் நாராயணசாமி அவர்கள் மற்றும் அவர் குழுவினர் பாராட்டுகள் தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து குழந்தைகளும் பரதம் கற்றுக்கொள்ள வேண்டும் பல சாதனைகள் படைத்து ஊருக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும் என்று பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஊர் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கோலாட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற்றதை அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed