தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், 35வது ஆண்டு விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஆகிய ஒன்றியங்களில் 35 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தது. அதில், முதற்கட்டமாக இன்று சோழவரம் ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியில் முதல் மருத்துவ முகாம் துவக்கப்பட்டது.


இந்த முகாமில், மஞ்சங்கரணியில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை வேந்தர், மருத்துவர்,
கே.நாராயணசாமி அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, பொது மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கண் சிகிச்சைகள், ஆகியவைகளும், உடல் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை உட்பட பலவிதமான பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்த முகாமில், 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என 25 க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் வந்திருந்து ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கியும், பரிசோதனைகள் செய்தும் மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.


மேலும், சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த மக்களுக்கு மருத்துவக் குழுவினர் மருத்துவ சிகிச்சை வழங்கியதுடன், உடல் நலத்தை பேணுவதற்கான அறிவுரைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தனர். முகாமில், பரிசோதனை செய்து கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு, வேல்ஸ் மருத்துவமனையின் சார்பில், எந்த கட்டணமும் இன்றி தொடர் மாதாந்திர சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன் இலவசமாக பிரசவமும் பார்க்கப்படும் என அறிவுறுத்தினர்.


இந்த மருத்துவ முகாமை ஆத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சற்குணன் துவக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ஆத்தூர் தாஸ், மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் மில்டன், மாவட்ட செயலாளர் அருள், பொருளாளர் யாகோப், செய்தி தொடர்பாளர் பழவை முத்து, எழில், உங்கள் நண்பன் அபூபக்கர், ஆசிர்வாதம், உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி, சோழவரம், மீஞ்சூர், ஆகிய ஒன்றியங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
