வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கார்த்திகேயபுரம் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து தேங்காய் கற்பூரம் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து அம்மனுக்கு பூ .கரகம் எடுத்து கூழ் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் பெண்கள் அம்மன் அருளால் தீ , மிதித்தலும் இன்னிசை கச்சேரியும் மேலும், கேரளா மேல தாளங்களோடு முழங்க, ஆடலும் – பாடலும் நிகழ்ச்சிகளுடன் இந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், ஊர் நாட்டாமை எஸ். சுரேஷ் ஊர் தலைவர் ஜி. மகேந்திரன் ஊர் மேட்டுக்குடி எஸ். எம். உதயகுமார் ஊர் செயலாளர் கே. மகேந்திரன் ஊர் துணை தலைவர் டி. விஜயகுமார் ஊர் துணை மேட்டுக்குடி கே .விஜி ,என்ற பரந்தாமன், ஊர் கோயில் பூசாரி பி. சுந்தர்ராஜ் ஊர் கோல் கார் இ. முருகன் ஆகியோ முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,

எம். மகேந்திர பாபு, எம் பக்தவச்சலம் எம். செரு வங்கி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மோகன், மாவட்ட குழு உறுப்பினர்டி. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம். மோகன், ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக, குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார், அவர்கள் கலந்து கொண்டார். விழா குழுவினர்கள் எம். அருண் ஜே. சிலம்பரசன் டி. பாபு எம். நவீன் குமார் ஜே. வேங்கீஸ்வரன் சி. பிரசாந்த் ஆர். லட்சுமிபதி, ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றார்கள்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed