தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, பத்திரிக்கையாளர்களின் போராளி டி.எஸ். ரவீந்திரநாத் அவர்களால் துவக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் பணியாற்றி வரக்கூடிய பத்திரிக்கையாளர்களின் நலனுக்காக துவக்கப்பட்ட இந்த சங்கம், தற்போது 35-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.

இதை கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், வருகின்ற நவம்பர் மாதம் காமராஜர் அரங்கில், 35 வது ஆண்டை முன்னிட்டு பிரமாண்ட முறையில் மாநாடு நடத்த மாநில நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக 35 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஆகிய ஒன்றியங்களில் 35 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளன. அதில், முதற்கட்டமாக சோழவரம் ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியில் மஞ்சங்கரணியில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து இலவசமாக நடத்தப்படும் முதல் மருத்துவ முகாம், 21-8-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த இலவச மருத்துவ முகாமில், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் செய்து, வேல்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால், அவர்களுடைய பிரசவ செலவு ஏதும் இன்றி இலவசமாக பிரசவம் பார்க்கப்படும். மேலும், மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு பத்தாயிரம் மதிப்புள்ள பரிசு பெட்டகமும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இலவச மருத்துவ முகாம் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், ஒன்றியங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச மருத்துவ முகங்களுக்கான ஏற்பாடுகளை, மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மற்றும் தேசிய குழு உறுப்பினர் P.G.பாலகிருஷ்ணன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மில்டன், மாவட்ட செயலாளர் அருள், மாவட்ட பொருளாளர் யாகோப், மாவட்ட செய்தி தொடர்பாளர் பழவை முத்து ஆகியோர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed