கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போலுப்பள்ளி வளாகத்தில் கல்லூரி முதல்வர் மரு. க.சத்யபாமா அவர்கள் இந்திய திருநாட்டின் 80 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திரம் பெற்று தர பாடுப்பாட்ட தேசத் தலைவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றிட நடத்திய போராட்டங்கள் குறித்தும், உயிர் நீத்த தியாக சீலர்கள் குறித்தும் நாடு நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல் நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை மாவட்ட அளவில் மட்டுமல்லாது மாநில அளவிலும் அனைத்து துறைகளிலும் சிறப்பான சேவை மற்றும் மருத்துவ சிகிச்சையளிப்பதிலும் முதன்மையான மருத்துவமனையாக திகழத்தக்கவாறு அனைவரும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் / செவிலியர்கள் / தொழில் நுட்ப வல்லுனர்கள் / அமைச்சுப் பணி அலுவலர்கள்/ அடிப்படை பணியாளர்கள்/ கிரிஸ்டல் பணியாளர்கள்/ உள்ளிட்டவர்களில் 17 (பதினேழு) அலுவர்கள் , பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் பாராட்டுசன்றிதழ் பெற்று தந்தும் 120 (நூற்று இருபது ) நபர்களுக்கு முதல்வர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியும் சிறப்பித்தார்கள் .

இந் நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.P.சந்திரசேகர் அவர்கள், துணை முதல்வர் மரு.R.P. சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. M செல்வராஜ் ஆகியோர் முன்னிலை உரையும், வாழ்த்துரையும் வழங்கி சான்றுகள் வழங்கினர்.
உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. K.S.தினேஷ் , பேராசிரியர்கள்/இணை பேராசிரியர்கள்/ நிர்வாக அலுவலர்கள் சரவணன், சக்திவேல்/ செலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிர்வாக அலுவலர் எஸ்.கே.சரவணன் கிரிஸ்டல் மேலாளர் திரு. பிலிப் மோன்ஸ் ஆகியோர் நிகழ்சி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி /. 8939476777
