திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் பல இடங்களில் மின்சார கம்பங்கள் மிகவும் அதிக அளவில் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளன. அதில், சில இடங்களில் இருக்கக்கூடிய மின்கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுமோ என்ற ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.

குறிப்பாக, ஆண்டியார் பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய சிவன் கோயில் பின்புறம் உள்ள ஒரு மின்கம்பம் காற்று சிறிது பலமாக வீசினாலும் கூட விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்து வருகிறது. மூன்று திசைகளில் மின்சார கம்பிகளை கடத்திச் செல்லக்கூடிய அந்த மின் கம்பத்தில் மேல் பகுதியில் இருக்கக்கூடிய கம்பியில் மிக உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மின்கம்பம் தற்போது அதை தாங்கி பிடிக்கக்கூடிய கம்பியின் பிடிமானத்தில் மட்டுமே நின்று கொண்டு உள்ளது.

இது குறித்து, பொன்னேரி மின்வாரிய ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் செய்தும் அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்து இந்த மின் கம்பத்தை மாற்றி கொடுக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், அந்த மின்கம்பத்தை சுற்றி அதிக அளவில் மாடுகள் எப்போதும் மேய்ந்து கொண்டிருப்பது வழக்கம், அவைகள் சில நேரங்களில் இந்த மின்கம்பத்தில் தனது உடலை தேய்த்து உரசுவதும் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. அந்த சூழ்நிலையில் அந்த மின் கம்பம் சேதம் அடைந்து விழுந்தாலும் பல மாடுகள் மட்டுமில்லாமல் அதை மேய்த்துக் கொண்டிருக்கக் கூடிய மனித உயிர்களுக்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, பொன்னேரி மின்வாரிய துறை அதிகாரிகள் அந்த மின் கம்பத்தை ஆய்வு செய்து உடனடியாக மாற்றி கொடுத்தால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம், இல்லையென்றால், அடுத்து வரக்கூடிய மழை காலத்தில் காற்று பலமாக வீசினாலும் கண்டிப்பாக அந்த மின் கம்பத்தால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed