கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள காவாப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சகஸ்ரநாமம் என்பருக்கும்
நிலத்தகராறு கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெல் அறுவடை செய்யும் பணியில் சகஸ்ரநாமத்தின் தரப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி
ஈடுபட்டு வருவதக வந்த தகவலையடுத்து கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று தடுத்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த கோவிந்தசாமி, ஜெயகுமார், மாரியப்பன், வெங்கடேசன், ஜெகநாதன் ஜெகதீஷ்வரி ஆகியோர் அங்கு இருந்த கம்பி மற்றும் மரக்கட்டையை கொண்டு கிருஷ்ணமூர்த்தியை கை, கால் போன்ற இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை வெறி தாக்குதலில் சுய நினைவு இழந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இது தொடர்பாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஆனந்தலட்சுமி கொலை வெறிதாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்து உள்ளனர், ஆனால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த சம்பந்தமும் இல்லாத ஆனந்தலட்சுமி அவரது மகள் சன்மதி, மருகன் சிலம்பரசன் ஆகியோர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள கிருஷ்ணமூர்த்தி தனது வயதான மனைவியுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தை கண்டித்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து, தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியிடம் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்ததின் பேரில் கிருஷ்ண மூர்த்தி தனது தர்ணாப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

நாகரசம்பட்டி காவல் துறையினரின் அடவாடித்தனத்தை கண்டித்து தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
