இந்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CIBA) வளம் குன்றிய கடலோர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதார வருவாயை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு,பழங்குடியினர் நல திட்டம் (STC) மற்றும் பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டம் (SCSP) போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, “கடலோர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உவர்நீர் வளர்ப்பில் தொழில்நுட்பங்கள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த 40 ஆண், பெண் பயனாளிகள் பங்கேற்றனர். முனைவர் எம். கைலாசம், இயக்குநர், இந்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR CIBA) இக்கருத்தரங்கினை தலைமை தாங்கி, “தமிழ்நாட்டில் கடலோர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் சமூக மேம்பாட்டிற்கான உவர்நீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ‘இருளர்கள் தமிழ்நாட்டின் பழங்குடி மக்கள்’ என்ற ஆவணப்படமும் முதல்முறையாக திரையிடப்பட்டது.

முனைவர் எம். கைலாசம், இயக்குநர், இந்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CIBA) தனது உரையில், கொடுவா மீன் கூண்டு வளர்ப்பு (Asian Seabass Lates calcarifer), (Pearlspot – Etroplus (Milkfish Chanos chanos) suratensis) பிற துடுப்பு மீன் வகைகளை வளர்த்தல், நண்டு வளர்ப்பு (Mud Crab – Scylla serrata), மீன்கள் வளர்ப்பு, மீன் கழிவுகளிலிருந்து பிளாங்க்டன்பிளஸ் (PlanktonPlus) மற்றும் ஹார்டிபிளஸ் (HortiPlus) போன்ற பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் கடலோர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதார வருவாயை மேம்படுத்துவதில் இந்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கை வலியுறுத்தினார். இத்தொழில்நுட்பங்கள் சிறு
மற்றும் குறு அளவிலான கூட்டு மீன் வளர்ப்பிற்கு தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானவையாகவும், பொருளாதார ரீதியாக இலாபகரமானவை ஆகும்.

முன்னதாக முனைவர் பி. சாந்தி,முதன்மை விஞ்ஞானி, அனைவரையும் வரவேற்று, இக்கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். இக்கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள்,எஸ் ஜெயா,செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விஜயா மற்றும் எம். அருண்குமார் ஆகியோர் ICAR-CIBA தொழில்நுட்பங்கள் மூலம் பெற்ற பொருளாதார மற்றும் இதர நன்மைகள் குறித்தும், அவற்றை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்துவதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்களின் மதிப்பீடு மற்றும் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்” என்ற தலைப்பில், செங்கல்பட்டு மாவட்டம்,குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அருண்குமார், உவர்நீரில் கொடுவா வளர்ப்பு குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர், நோய் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவை (AAHED) சேர்ந்த முனைவர் பி குமரராஜா, மூத்த விஞ்ஞானி “மீன்வளர்ப்பில் எல்-நினோவின் தாக்கம் மற்றும் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” குறித்து விவரித்தார். இதனைத் தொடர்ந்து ICAR-CIBA தொழில்நுட்பங்களினால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அடைந்த நன்மைகள் குறித்தும் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் குறித்தும், தொழில்நுட்பங்களை தொடர்ந்து பின்பற்றுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்தும் கலந்துரையாடினர். அந்தத் தடைகளை எவ்வாறு நீக்குவது குறித்தும் விவாத்திகப்பட்டது.

முனைவர் சாந்தி இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் சி.வி. சாய்ராம் முனைவர் எம். பூர்ணிமா முனைவர்.பொ. மகாலட்சுமி,முனைவர் ஆர் கீதா (மூத்த விஞ்ஞானி,மற்றும் முனைவர் வித்யா ராஜேந்திரன் மூத்த விஞ்ஞானி, ஆகியோர் இதன் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பங்குபெற்றனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed