தமிழகத்தில் அடுத்து வரும் 30 , 40 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய் தான் என அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட அமைச்சர் நிர்மல்குமார் ;

திருப்பரங்குன்றம் தொகுதிகுட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் ஆகியோர் கலந்து கொண்டனர் அமைச்சர் பேசும்போது எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் கொடுத்த நம்பிக்கையை கடைசி வரை காப்போம்; மக்களோடு தான் இருப்போம்” – அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட விழா நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் உரை. தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு வந்தபோது எப்படி மக்களுடன் இருந்தோமோ, அதேபோல பதவியில் இருந்தாலும் இறுதி வரை மக்களோடு இணைந்தே செயல்படுவோம் என்றார். அமைச்சர், எம்.எல்.ஏ. என்ற அதிகார மனப்பான்மை இல்லாமல், மக்கள் பிரதிநிதிகளாக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வீடு தோறும் சென்று வாக்கு கேட்டதையும், அப்போது மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் தங்களை ஒப்பிட வேண்டாம்; மக்களுடன் நேரடியாக இருப்பதே தங்களின் நோக்கம் என்றார். மதுரை மாநகராட்சியில் ஊழல் மற்றும் சொத்து குவிப்பு மேயர் கணவர் கைது மாமன்றம் கலைக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறினார். மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய அமைச்சர், மதுரை மாநகரில் கழிவுநீர் கால்வாய் திட்டம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அவை விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, மக்களின் அன்றாட தேவைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுதியிலேயே இருந்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு தீர்வு காண்பேன் என்றும் கூறினார்.

இறுதியாக, “இது மக்களின் அரசு. எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாக தெரிவியுங்கள். உங்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று கூறி, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed