வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)
என்பவருக்கு சொந்தமான தோட்டம் குலசேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது.
இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி நீள,அகலமுள்ள 40 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய நிலையில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறு உள்ளது. இந்தக் கிணற்று பகுதியில் காலை துர்நாற்றம் வீச துவங்கியது.

அதை தொடர்ந்து அந்த பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் சென்று பார்த்த போது
கிணற்றுக்குள் வாலிபர் பிணம் கிடப்பதுதெரியவந்தது. இது பற்றிதகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கோபி, சப் இன்ஸ்பெக்டர் பாபு காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் அடர்பச்சை நிற முழுக்கை பனியனும், புளு கலர்பேண்ட்டும் அணிந்த நிலையில் இருந்தது.

அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. இதில் பிணம் மிக அழுகிய நிலையில் இருந்ததால் அங்க அடையாளம் மச்ச அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து குலசேகரன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed