மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்கள் விரதத்தை துவக்கினர் இதற்காக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.

அங்கு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து விரதத்தை துவக்கினர் சிவாச்சாரியார் கண்ணன் என்ற பரசுராமன் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். பின்பு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

தென்கரை முள்ளிப்பள்ளம் சோழவந்தான் மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

முதல் முறையாக சபரிமலை செல்லும் கன்னி சாமிகளும் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர் இதே போல் சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகாலை முதல் மாலை அணிவித்து சென்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed