பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜு இவர், காஞ்சிபுரத்தில் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய ராஜு அவர்களின் இளைய மகன் அவர், இவர் தற்போது பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் ஏகலைவன் கட்டணமில்லா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் பயிற்சி ஆசிரியராக, போட்டித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவ – மாணவிகளுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.

இந்து மதத்தினர் கொண்டாடும் கொண்டாட்டங்களில் ஒன்றான நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடுகளில் பொம்மைகளை அலங்கரித்து வைத்து கொலு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம., அதேபோல், கோகுல் ராஜு அவர்களுடைய இல்லத்திலும் அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் வருடா வருடம் இந்த கொலு நிகழ்ச்சியை தங்கள் வீட்டில் நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் இவர்களுடைய வீட்டில் நவராத்திரி கொலு விழா கடந்த வாரத்தில் இருந்து மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதில், மரப்பலகைகளை கொண்டு பல படிகள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கில் வண்ணமயமான மர பொம்மைகள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில், இந்து மத கடவுளுடைய உருவ பொம்மைகளும், மற்றும் தமிழர்களுடைய சடங்குகள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை எடுத்துக் கூறும் விதமாக பொம்மைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

அதில், தமிழர்களுடைய பாரம்பரிய திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகள், இறைவன் வழிபாடு முறைகளை எடுத்துக்காட்டும் வகையிலும், பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, அத்திவரதர் சிலையும், கார்த்திகை பெண்கள், மதுரை மீனாட்சி அம்மன், முருகர், வள்ளி , தெய்வானை , சித்தர்கள், முனிவர்கள், கைலைமலை சிவன், உச்சிப்பிள்ளையார் உட்பட சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. அங்கு கொலுவில் வைக்கப்பட்டுள்ள கடவுள் சிலைகளுக்கு கடந்த ஒரு வாரமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் கோகுல்ராஜ் அவர்களுடைய உறவினர்களும், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களும் தினமும் நடைபெறக்கூடிய பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து, கோகுல்ராஜு அவர்களின் தாயார் கமலவல்லி அவர்கள் கூறுகையில் : கடந்த 24 ஆண்டுகளாக நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகிறோம். இதில் நவராத்திரி 9 நாட்களும் வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்கும். தினமும் விளக்கேற்றி பாடல்கள் பாடுவதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது ஐதீகம், இந்த ஆண்டு கொலுபடிகள் அமைப்பது முதல் பொம்மைகளை அழகு பட அடுக்கி வைக்கும் பணிகளை எங்கள் பிள்ளைகள் மட்டுமில்லாமல், ஏகலைவன் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்து கொண்டிருக்கும் மாணவிகள், திவ்யா, பிரீத்தி, மாலினி, பிரியா ஆகியோரும் முன்னதாக வந்திருந்து இந்த கொலு பொம்மைகளை அலங்கரிக்கும் பணிகளை செய்தனர்.

இன்று வைக்கப்பட்டிருக்கும், ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு புராண கதை உண்டு. ராமாயணம், மகாபாரதம், தசாவதாரம் கதைகளை குழந்தைகள் விளையாட்டாக கற்றுக் கொள்வார்கள். இவ்விழாவில் உறவினர்கள், அண்டை வீட்டாரை அழைத்து வெற்றிலை, பாக்கு, சுண்டல் கொடுக்கும் போது சமூக உறவு வலுப்படும். பெண்களுக்கு இது ஒரு சமூக சந்திப்பு விழாவாகவும் உள்ளதோடு வண்ண வண்ண பொம்மைகளை அழகாக அடுக்கி, அதை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed