இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது பதவி விலக கோரி நாடு முழுவதும் மாணவர்கள் இளைஞர்கள் வழக்கறிஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் இன்று நடைபெறும் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில், பொன்னேரி சார்பு நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வழக்கறிஞர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். பொன்னேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

