கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நவம்பர் 2-இல் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தம் என எச்சரிக்கை.

​————-

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறியாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் J. வெங்கடேசன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களைப் கடுமையாகப் பாதிக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ டெண்டர் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், தனியார் மயமாக்கப்படும் மின் உற்பத்தி மற்றும் மின் வழித்தடத் திட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்., 5 ஆண்டு கால ஒப்பந்த முறையைத் திரும்பப் பெற வேண்டும். வாரிய ஆணை எண் 2-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்., அரசு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி தொகையை 25 லட்ச ரூபாயாக மின்வாரியப் பணியாளர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல குடும்ப நலநிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக 01.09.2021 முன்தேதியிட்டு மின்வாரிய ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.என வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசு மற்றும் மின்வாரிய நிர்வாகம் இந்தக் கோரிக்கைகளை உடனடியாக ஏற்காவிட்டால், வருகின்ற 02.11.2026 அன்று தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மின்வாரியப் பணியாளர்களும் ‘வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என கூட்டு நடவடிக்கை குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் TNEWF திட்ட செயலாளர் E. மூர்த்தி, தொமுச திட்ட தலைவர் S. குடியரசு, CITU திட்ட செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான G. படவேட்டான், ஐக்கிய சங்கம் திட்ட செயலாளர் N. கோபாலகிருஷ்ணன், ஜனதா தொழிலாளர் சங்கம் V. ஜனாதனன், டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் சங்க திட்ட செயலாளர் J.C. சார்லஸ் சுரேஷ்குமார், TNEB எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் திட்ட செயலாளர் R. மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் CITU திட்ட தலைவர் P. கேசவன் நன்றியுரை ஆற்றினார். இதில் பொறியாளர்கள், அலுவலர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேட்டி. G.படவேட்டான். சி ஐ டி யு மாநில செயற்குழு உறுப்பினர்

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed