திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஒன்றியம் இராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கு.டேவிட். பொறியாளர் பட்டதாரியான இவர் திருமணத்திற்கு முன்பே இளம் வயதில் ஊராட்சி மன்றத் தலைவராகி மக்கள் போற்றும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

12 வார்டுகளைக் கொண்ட  இராமையன்பட்டி பஞ்சாயத்தின்கீழ் கம்மாளங்குளம், போலீஸ் காலனி, வேப்பங்குளம், அரசுப் புதுக் காலனி, அபிஷேகப்பட்டி, அக்ரஹாரம், இராமையன்பட்டி, சத்திரம் புதுக்குளம், தேநீர்குளம், இராஜகோபாலபுரம், சங்குமுத்தம்மாள் புரம் போன்ற பல்வேறு கிராமங்கள் அடங்கியுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றி வரும் இளைஞர் பொறியாளர் கு.டேவிட், அரசுத்துறை மூலமாகவும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உதவி மூலம் இராமையன்பட்டி பஞ்சாயத்தில்  ரூபாய் 15 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளார்.

குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி  நிதி உதவி மூலம் சிவாஜிநகர், அரசு புதுக் காலனி ஆகிய இடங்களில் இரண்டு பேருந்து நிறுத்தங்களைக் கட்டியுள்ளார். அபிஷேகப்பட்டி, கம்மாளங்குளம், வேப்பங்குளம் ஆகிய மூன்று இடங்களில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதி உதவி மூலம்  இராமையன்பட்டி மெயின் ரோட்டில் ரவுண்டானா அமைத்து உயர் கோபுர மின் விளக்கு அமைத்துள்ளார்.

       

இராஜகோபாலபுரம் பகுதியில் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டி இராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கு.டேவிட் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். மத்திய அரசின் நிதி, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் சி.எஸ்.ஆர். பண்டு நிதி உதவியின் மூலம் கம்மாளங்குளம், சத்திரம் புதுக்குளம், இராஜகோபாலபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் “அங்கன்வாடி” அமைத்துள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் குடிநீர் வசதி பெறும் வகையில் இராமையன்பட்iowடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 5,600 குடிநீர் இணைப்புகளை Calculator வழங்கி சாதனை படைத்துள்ளார், ஊராட்சி மன்றத் தலைவர் கு.டேவிhட். குறிப்பாக பொதுமக்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் நலச் சேவை செய்துள்ள ஊராட்சி மன்றத் தலைவர் டேவிட், செய்த பணிகளை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து மக்கள் நல சேவை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், இராமையன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக “பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம்” ஆகிய திட்டத்தின் கீழ் 170 இலவச வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர் பொறியாளர் கு.டேவிட், எதிரொலி.யின் நெல்லை மாவட்டச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனியிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 8825850212.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed