ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் , ராமேஸ்வரம் வட்டம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள அன்னாவது நினைவிடத்தில், தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அது சமயம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடன் இருந்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
