தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், நவம்பர் மாதம் 3 தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்குவோம்…
போராட்டத்தை தலைமை தாங்கி மாநில பொதுச் செயலாளர் மு.இருளாண்டி நடத்தினார்.
11 அம்ச கோரிக்கைகள்
மக்கள் உயிரைக் காக்கும் 108 தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும்!
எங்களின் முக்கிய கோரிக்கைகள்:

- 108 சேவையை அரசு ஏற்று நடத்துக!
PPP முறையை கைவிட்டு, தமிழ்நாடு அரசு நேரடியாக 108 சேவையை நடத்த வேண்டும். சுமார் 7,000 தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். - தொழிலாளர் தீர்ப்பாயத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துக!
2022–23க்கான 25% ஊதிய உயர்வு, 8.33% குறைந்தபட்ச போனஸ், வழக்குச் செலவு மற்றும் 9% வட்டி உள்ளிட்ட தீர்ப்புப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ந்து 2024, 2025, 2026 ஆண்டுகளுக்கான உரிய பலன்களையும் வழங்க வேண்டும். - 8 மணி நேர வேலையை அமல்படுத்துக!
மூன்று ஷிப்ட் முறையில் 8 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்தி, தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஏற்கனவே உள்ள பணிப் பலன்கள் எதுவும் குறையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். - 2026ஆம் ஆண்டிற்கான 25% ஊதிய உயர்வு வழங்குக!
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போதைய 10% உயர்வை மறுபரிசீலனை செய்து 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும். - பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குக!
சம்பளத்துடன் 1 ஆண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் தொழிலாளர்கள்/குடும்பத்தினருக்கான மருத்துவக் காப்பீட்டை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும். - உயிரிழப்பு காப்பீட்டை உயர்த்துக!
ON DUTY – ₹50 லட்சம்
OFF DUTY – ₹30 லட்சம்
என காப்பீட்டை உயர்த்த வேண்டும். பணியின்போது உயிரிழப்போரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்தும் உதவி வழங்க வேண்டும். - IN TIME – OUT TIME முறையை முறையாக அமல்படுத்துக!
Face Biometric மூலம் பணிக்கு வரும் மற்றும் பணி முடித்து செல்லும் நேரம் இரண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். வருகைப் பதிவில் ஏற்படும் தவறுகளால் சம்பளம் பாதிக்கப்படக் கூடாது. - முதல் வேலை நாளிலேயே முழு சம்பளம் வழங்குக!
சம்பளத்தை தவணைகளாக வழங்குவதை நிறுத்தி, ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளிலேயே முழு சம்பளம் வழங்க வேண்டும். 5ஆம் தேதிக்குள் Salary Slip வழங்க வேண்டும். - Fixed Term Employment முறையை கைவிடுக!
Fixed Term முறையை நீக்கி, தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணி இழந்த தொழிலாளர்களுக்கு உரிய நடைமுறையின்படி மீண்டும் பணி வழங்க வேண்டும். - விடுப்பு மற்றும் பண்டிகை பணப்பலன்களை மீண்டும் வழங்குக!
15 நாட்கள் ஈட்டிய விடுப்பு பணப்பலன், 10 நாட்கள் Paid Leave பணப்பலன் மற்றும் பண்டிகை நாட்களில் பணிபுரிவோருக்கான இரட்டிப்பு சம்பளப் பலனை மீண்டும் வழங்க வேண்டும். - தண்டனை பணி மாற்றத்தில் நியாயமான நடைமுறை வேண்டும்!
எழுத்துப்பூர்வமான உத்தரவு, தெளிவான காலவரம்பு மற்றும் மாவட்ட அளவில் விசாரணை வேண்டும். குடும்பத்தைப் பாதிக்கும் வகையில் 400 கி.மீ. தொலைவிற்கு பணி மாற்றம் செய்வதைத் தவிர்த்து, அருகிலுள்ள மாவட்டங்களில் பணி வழங்க வேண்டும்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
