நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி மாவட்டம் வாளாடி பேருந்து நிறுத்தம் அருகில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். மயங்கி கிடந்த மூதாட்டி உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

லால்குடி காவல் நிலைய காவலர்கள் சம்பவம் இடம் சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கையில், மயங்கி கிடந்த மூதாட்டி பொதுமக்களிடம் யாசகம் பெற்று கிடைத்த இடத்தில் உண்டு உறங்கி வருவதாகவும் அவர் பெயர் காமாட்சி என்றும் தெரியவந்தது. மருத்துவமனையில் உயிரிழந்த ஆதரவற்ற மூதாட்டி உடல், உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக லால்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்வதி உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் லால்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்வதி முன்னிலையில் உரிமை கோரப்படாத மூதாட்டி உடலுக்கு யோகா ஆசிரியர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed