சென்னை பெருங்களத்தூரில் உள்ள புகழ்பெற்ற சாரதா சக்தி பீடத்தின் சார்பில் சதுரகிரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
சதுரகிரி மலையில் உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில், சந்தன மகாலிங்க சுவாமி கோயில், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.
மலையில் இருந்த பல்வேறு அன்னதான மடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டு விட்டதால், கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை மட்டுமே அனைத்து பக்தர்களும் நம்பியிருக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில் பக்தர்களின் பசிப்பிணியை போக்குவதற்காக சென்னை பெருங்களத்தூரில் உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சாரதா சக்தி பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான தொடக்க விழா மலை அடிவாரமான தாணிப்பாறையில் நடந்தது.
சாரதா சக்தி பீடத்தின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். வத்திராயிருப்பு தொழிலதிபர் கண்ணன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், தொழிலதிபர் சரவணன், சமூக சேவகர்கள் ஆசிரியர்கள் சதுரகிரி பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்பு அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன்
