சித்தலூர் முருகன் ஏற்பாடு…
மஹாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகமெங்கும் முன்னோர்களை வணங்கி ஆங்காங்கே சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.
அதன்படி சிவகங்கை திமுக தெற்கு ஒன்றியத் துணைச்செயலாளரும் , கோவானூர் ஊராட்சிமன்ற மேனாள் தலைவரும் , மாவட்ட தொழிலாளரணி தலைவருமான சித்தலூர் எஸ். முருகன் ஏற்பாட்டில் கோடாங்கிபட்டி அருகேயுள்ள குடஞ்சாடி கண்மாய்ப் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு நல் அரவான் கோவிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தி இறுதியில் சுமார் கிராம மக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது…
மிகவும் பழமைவாய்ந்த கோவிலாக அறியப்பட்ட இந்த நல் அரவான் கோவிலானது சக்தி வாயந்த கோவிலாக விளங்கி வருகிறது என கோவில் பூசாரி கிருஷ்ணன் கூறினார்…
செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
